பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24

நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. 1933இல் பண்டிதர் உலகநாத பிள்ளை அச்சிட்டார். இந்நூலில் 103 பாடல்கள் உள்ளன. பிள்ளைத்தமிழ் பற்றிய குறிப்புகள் தொல் காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணப்படு கின்றன. ஆயினும் பிள்ளைத்தமிழ்ப் பகுதிகள் பலவற் றைத் தொடர்புபடப் பாடியவர் பெரியாழ்வார். ஆயினும் இதனை முழுமையாகப் பிள்ளைத் தமிழ் என்று கூற முடியாது. இத் தமிழை முதன் முதல் அளித்தவர் ஒட்டக் கூத்தரே. இப்போது கிடைத்த இந்நூலின் அமைப்பு.

1. காப்புப் பருவம்-11 பாடல்

செங்கீரைப் பருவம்-11 பாடல் தாலப் பருவம்-11 பாடல் சப்பாணிப் பருவம்- 1 1 பாடல் முத்தப் பருவம்- 1 1 பாடல் வாரானைப் பருவம்-11 பாடல் அம்புலிப் பருவம்-12 பாடல் சிறுபறைப் பருவம்-7 பாடல் சிற்றிற் பருவம்-11 பாடல் சிறுதேர்ப் பருவம்-7 பாடல்

1

சிறுபறைப் பருவம் நாற்சீர் கொண்ட சந்தக் கலி விருத்தமாக உள்ளது. பெரும்பாலும் பிள்ளைத்தமிழ் ஆசிரிய விருத்தத்தால் பாடப்பெற, இவர் சந்தக் கலிவிருத் தத்தைக் கையாண்ட முறை குறிப்பிடத்தக்கது.

குலோத்துங்க சோழனுலாப் பாடிய பின்னரே இப் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். இதன்பின் தோன்றிய சங்கரசோழனுலா,

கூடிய சீர்தந்த என்றெடுத்த கூத்தனுலாச் சூடிய விக்கிரம சோழனும்-பாடிய வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டுமவன் பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனும் எனக் குறிப்பிடுதலால் அறியலாம்.