பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39

செருத்தங் தரித்துக் கலிங்க ரோடத்

தென்றமிழ்த் தெய்வப் பரணி கொண்டு

வருத்தங் தவிர்த்துல காண்ட பிரான்

மைந்தற்கு மைந்தனை வாழ்த் தினவே."

விக்கிரம சோழன் மீது ஒட்டக்கூத்தர் கலிங்கத்துப் பரணி (கலிங்கப்பரணி) பாடியது:

விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான்-தரும்புதல்வன் கொற்றக் குலோத்துங்க சோழன்

தரணியொரு கவிகை தங்கக் கலிங்கப் பரணி புனைந்த பருதி-முரணில் புரந்தர னேமி பொருவு மகில துரந்தரன் விக்கிரம சோழன்."" பின்வரும் பாட்டியல் இலக்கண நூல்கள் பரணி நூல் எழுதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டாலும், ஆயிரம் யானைகளை அமர்க் களத்திலே அட்டு வெற்றி வாகை சூடிய வேந்தனை நயம்பட நாவாரப் புகழ்ந்து பாடுதலே பரணியின் இலக்கணம் என்பது புலப்படுகின்றது. பரணியின் இலக்கணம்

பின்வரும் நூற்பாக்கள் பரணியின் இலக்கணம் கூறும்: வஞ்சி மலைந்த உழிஞை முற்றித் - தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை வெம்புசின மாற்றான் தானை வெங் களத்தில் குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே.""

-பன்னிரு பாட்டியல்: 57

57. தக்கயாகப் பரணி: கூழடுதலும் இடுதலும்: 49. 58. குலோத் துங்க சோழன் உலா: 28, 29. 59. இராசராச சோழன் 27, 28. 60. பன்னிரு பாட்டியல்: 57.