பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41

வாள் ஆகிய படைக்கலங்களால் அமைக்கப்பட்ட பரண் மீதிருந்து புலவர் இந் நூலைப்பாடுதலால் இந்நூல் பரணி ான அழைக்கப்படுகின்றது என்பர் சிலர்.

அணி மணி முதலியவற்றை வைக்கும் செப்பு பரணி என அழைக்கப்படுதல் போல, பல்வேறு கற்பனை நலமும் வைகளும் தன்னகத்துக் கொண்டது இவ்விலக்கிய மாதலால் இது பரணி என அழைக்கப்படுகின்றது என்பர் வேறு சிலர்.

இப் பெயர் பரணி நட்சத்திரம் பற்றி அமைந்த பெய ாாகும் என்றும் அறிஞர் சிலர் கூறுவது ஏற்புடைய கருத் தாக விளங்குகின்றது.

நாற்பொருள்

தக்கயாகப் பரணி என்று ஒட்டக்கூத்தரால் இயற்றப் பட்ட இப் பரணி, தாட்சாயணி (உமாதேவி)யின் தந்தை பாகிய தக்கன், சிவபெருமானை மதிக்காமல், அவரை அவமதிக்கும் நோக்கில் செய்யப் புகுந்த யாகத்தைச் சிவபெருமான் வீரபத்திரக் கடவுளைத் தோற்றுவித்து, அவரைக் கொண்டு அந்த யாகத்தை யழித்து, தக்கனுக்கு _தவ வந்த தகாத தேவர்களை அவமானப்படுத்தி, இறுதியிற் தக்கனுடைய தலையையும் தடிந்த புராணச் செய்தியினைக் காப்பிய நயம்பட விளக்குகின்றது.

இப் பரணியின் பாட்டுடைத் தலைவன் சிவபெருமான், இப் பரணியைப் பாடும்படி வேண்டியவன் இரண்டாம் இராசராசன் ஆவன்.

தக்கயாகப் பரணியில் எண்ணுாற்றுப் பதினான்கு நாழிசைகள் அமைந்துள்ளன. முதற்கண் வைரவக் கடவுள் காப்பு அமைந்துள்ளது. இக்காப்புப் பகுதியே இப்பரணி முழுவதிலும் அமைந்துள்ள சந்தச் சுவைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.