பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

- -

55

i

இனி கோழிவொட்டக் கூத்தன்' என்று இவர் பாராட்டப்படுவது கொண்டு, இவர் சீகாழியில் பிறந்தவர் என்பர். காழியொட்டக் கூத்தன்' என்பது பாடமில்லை, காளியொட்டக் கூத்தன்' என்பதே பாடம் எனக் கொண்டு

அக் காளி' எனும் சொல், ஒட்டக்கூத்தரின் சமகாலத்துப் புலவராகிய நம்பிகாளி' எனும் புலவரைக் குறிப்பிட்டு நிற்கிறது என்பர். ஒட்டக்கூத்தர் காளிதேவியின் அருள் பெற்றவர். எனவே காளியொட்டக் கூத்தர்' என அழைக்கப்பெற்றார் என்பர்.

அடுத்து, தஞ்சை மாவட்டத்தில் பூந்தோட்டம் ரயில் நிலையத்திற்கு மூன்று கல் தொலைவில் அமைந்துள்ள கூத்தனுாரே ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் என்பர். விக்கிரம சோழன் முற்றுாட்டாக.புலவர்க்குப் பரிசாக இவ்வூரினைத் தந்துள்ளானேயன்றிக் கூத்தர் பிறப்பிடம் இவ்வூர் ஆகா தென்பர்.

தண்டியலங்கார மேற்கோள் செய்யுளொன்றில் மலரி வரும் கூந்தன் தன் வாக்கு ' எனும் தொடரால் ஒட்டக்கூத்தர் ஊர் மலரி என்பர்.

கல்வெட்டு ஆராய்ச்சிப் பேரறிஞரான திரு. டி. வி. சதாசிவப் பண்டாரத்தார் கலைக்களஞ்சியம், தொகுதி இரண்டில் ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் பற்றிப் பின்வருமாறு: குறிப்பிட்டுள்ளார்.

இப்புலவர் பிறந்தது மலரி என்னும் ஊர். இவ்வூர், திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் இக் காலத்தில் திருவரம்பூர் என்று வழங்கிவரும் திருஎறும்பியூரே என்பது அங்குள்ள கோயிற் கல்வெட்டால் உறுதி எய்துகின்றது. 9

எனவே கூத்தர் மலரியிற் பிறந்து, சீகாழியில் சிலகாலம்

வாழ்ந்து, கூத்தனுாரில் இறுதிக் காலத்தைக் கழித்து, இயற்கை எய்தியவர் என்று முடிவுக்கு வரலாம்.

89. கலைக்களஞ்சியம் : தொகுதி 2 : பக். 654.