பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57

இவர் காலத்திருந்த புலவர்கள் நம்பிகாளியார், நெற்குன்றவான முதலியார், தமிழ்த் தண்டியாசிரியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் முதலானோர் ஆவர். கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகியோர் இவர் காலத்தில் இருந் தவர்கள் என்பது சிலருடைய கொள்கையாகும்; அதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லை என்பது அறியத்தக்கது. அவர் களுள் புகழேந்திப் புலவர் இவருக்குச் சற்றேறக் குறைய நூறாண்டுகளுக்குப் பிற்பட்டவர். எனவே, இவருக்கும் அப் புலவருக்கும் வாதப் போர் நிகழ்ந்தது என்றும், இவர்

துரண்டுதலால் அவர் சோழ மன்னனால் சிறையிடப் பட்டார் என்றும் கூறப்படும் செய்திகள் எல்லாம் வெறுங் கற்பனைக் கதைகளேயன்றி உண்மையான சரித்திர

நிகழ்ச்சிகள் ஆகமாட்டா என்பது திண்ணம்: இவர் புலவர் பெருமக்களிடத்தில் பேரன்பும் பெருமதிப்பும் வைத் திருந்தார் என்பதை இவருடைய நூல்களால் நன்குணரலாம்.

இவரை ஆதரித்தவர்கள் மேலே குறிப்பிடப்பெற்ற சோழ மன்னர் மூவரும் அவர்களுடைய அமைச்சர்களும் படைத் தலைவர்களுமான அரும்பாக்கிழான் மனவிற் கூத்தன் காலிங்கராயன், திருச்சிற்றம்பல முடையான் பெரு மானம்பி என்பவர்களும், காவிரிப் பூம்பட்டினத்து வீரர்கள் புதுவைக் காங்கேயன், திரிபுவனைச் சோமன் ஆகியோரும் ஆவர். அ -

டாக்டர் மு. வ. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுவர் : அவர் (ஒட்டக்கூத்தர்) இலக்கண இலக்கியங்க ளில் வல்லவர். வடமொழிக் கல்வியும் நிரம்பியவர். பழைய மரபுகளை விடாமல் போற்றி, பிறர் செய்யும் தவறுகளைக் கடுமையாக எடுத் துரைத்துக்

90. அ. கலைக்களஞ்சியம்; இரண்டாந் தொகுதி : , : 655.