பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4

என்னும் பாட்டு, செங்குந்தர் பெருமக்களின் தழையாத தமிழார்வத்தைக் குறிப்பிடும். செங்குந்தர் என்ற சொல் குந்தத்திற்கு உரியவர் எனப் பொருள்படும். குந்தம் என்றால் ஈட்டி. ஈட்டி எழுபது என்னும் ஒட்டக்கூத்தர் நூல் செங்குந்தர் என அம் மரபினர் அழைக்கப்பெறு வதற்குரிய காரணத்தைப் புலப்படுத்துகின்றது: கைக் கோளர் என்ற பெயரும் இம்மரபினர்க்கு உண்டு என்பது எய்தவர்க்குச் சிறைச் சோறு மீகு வர் கைக்கோளராகிய செங்குந்தரே " என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. ஒட்டக்கூத்தர் வினைதீர்க்கும் விநாயகப் பெருமான் மாட்டும், தம் மரபினராகிய செங்குந்தரிடத்தும் கொண்ட ஆராத பக்தித் திறமும் அணையாத அன்பும் அவர்தம் ஈட்டி எழுபது காப்புச் செய்யுளால் விளக்கமுறும்:

நாட்டிலுயர் செங்குந்த நாயகர் மீ திற் சிறந்த ஈட்டி யெழுப தினைப்பாடக்-கோட்டில் பருமா வரையதனிற் பாரதி நூல் தீட்டும் கருமா முகன் கழலே காப்பு. மேலும் ஒட்டக் கூத்தர் செங்குந்தர்கள் நிதம் சந்தி சந்திசிவ சிந்தனை மறவாத ராவரிச் செங்குந்தரே' என்றும், குருபூசை சிவ பூசை மறவாத தயவாளர்' என்றும், தேவே விலகினும் நாவிலங்காதவர் என்றும், தேவி யுமை பாதச் சிலம்பில் வரு வீதியர்கள் சிறு தேருருட்டி யருளே’ என்றும், சண்மு கன்றன் சேனாபதி களும் சேனையும் ஆனவர் செங்குந்தரே " என்றும், சிங்கள மாதிய பல்தேயம் வென்றவர் என்றும், தெரிஞ்ச கைக் கோளப் படையினர்' எ ன் று. ம் கூறப்படுவதனால் செங்குந்தர் குலத்தின் சீர்மை விளங்கும்.

முதற் கண் சென்னைப் பல்கலைக் கழகத் தெய்வத் தமிழ் பற்றிய கருத்தரங்கிலும், பின்னர்ப் பல அமயங்களில் பல இலக்கிய மேடைகளில் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தரைப் பற்றிச் சொற்பெருக்காற்றும் வாய்ப்புக் கிடைத் தது. அதன் விளைவே இந் நூல். இந் நூல் வடிவும் வனப்பும் பெற இசைவளித்த சென்னைப் பல்கலைக் கழகத் தினர்க்கு நன்றியுடையேன். தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் இந் நூலைப் படைக்கின்றேன்.

சி. பா.