பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67

கான மழை பொழிந்தனவாம். நாகணவாய்ப் புள்ளும் சேவலும் நகைத்து மொழி கூறவும் உழவர் அவற்றின் முகம் பாராமல் புறத்திலே முகத்தைச் சாய்த்துத் தங்கள் வேலையில் கவனம் செலுத்தினார்கள். தேனுண்டு மயங்கிக் கிடந்த வண்டு, கோவை செய்யும் களியாட்டம் கண்டு விரும்பி, அதற்கேற்பக் கபோதப் பேடும் சேவலும் தம்மிலே விளிக்கும் தன்மை கண்டு வியந்தனவாம். இவ்வாறு இயற்கைக் காட்சி ஒன்றை மிகவும் நயமாக வருணித்துள்ளார் புலவர். (குலோத்துங்க: 272- 276)

குயில்களைப் பற்றிக் கூறுகையில் முற்றாத சொற் குதலைக் கோகுலங்கள்' (இராசராச: 165) என்று அழகாகக் கூறுகிறார்.

மகளிர் நீராடுதலை வருணித்துள்ளார். அவர்கள் நெடுநேரம் நீரிலே விளையாடினதால் ஏற்பட்ட நிலையைப் பின்வரும் அடிகளில் காணலாம்.

-வெள்ளம் படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன் வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப'

-இராச: 293

நீராடிய மகளிரது கண்கள் நீர் படிந்ததனால் சிவந்து விட்டனவாம். அவற்றிலிருந்து நீர் வழிந்த காட்சி கிண்ணத்திலிருந்து வடியும் செவ்வித் தேனை ஒத்திருந்த தாம்.

ஒட்டக்கூத்தரின் கற்பனையாற்றல் மிக்க வியப்பை அளிக்கின்றது. ஒவ்வோர் அடியும் மேன்மையான நயத்தை உடையதாயிருக்கின்றது. இ வ ர் கற்பனையாற்றலை அறிவதற்குச் சில அடிகளை நோக்குவோம்.

-சுடர்நோக்கும் தானுடைய மெய்ந்நுடக்கம் தன்மா தவிக்களித்து வானுடை மின்னுடக்கம் வாங்கினாள்.'

-விக்கிரம: 138