பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

6.

з2.

6.

76

சைவத்தின் ஏற்றம் புலப்படும்படி திருஞான சம்பந்தர் சைனரை வென்ற கதையைத் தேவிக்கு நாமகள் கூறியது முகமாகப் புதிதாக விளங்கக் கூறியிருத்தல்.

கூழடுதலென்னும் உறுப்பிற் பேய்கள் கூழையாக்கிக்

குடித்துப் பாட்டுடைத் தலைவனை வாழ்த்தாமல் இந்நூலை ஆக்குவித்த இராசராச சோழனையும் அவன் முன்னோர்களையும் அவர்களுடைய நற்செய் கைகளையும் வாழ்த்துதலைக் கூறியிருத்தல்.

களங்காட்டுதலிற் காளி பேய்களுக்குக் களங்காட்டிய தாகக் கூறியது போலன்றிக் கதைத் தொடர்பு புலப் படத் தேவிக்குச் சிவபெருமான் காட்டியதாகக் கூறி யிருத்தல்.

ஆக்குவித்தோனிடத்துள்ள பேரன்பால் அவனைத் தனியே இறுதியில் வாழ்த்தியிருத்தல்.

2. வரலாறு தொடர்பான செய்திகள்

இராச கம்பீரன் (இராசராசன் 2) பிட்டனை வென்று இரட்டனுக்குப் பட்டம் கட்டியது.

இராசராசபுரி பல அரசர்களாற் காக்கப்படுதல்.

. இராசராசன் 14 தில்லைத் தலத்தில் தேர் அமைத்தது.

அவன் பாண்டியரை வெல்லப் படைவிடுத்தது.

அவன் மலையை வெட்டிப் பொன்னிக்கு வழி கண்டது. --

அவன் வஞ்சியில் வாகை புனைந்தது.

ஒரு பாண்டியன் கை பொன்னானது.