பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாகப்பனின் நைப்பாசை

பாவலன் ஒருபு றத்தில்
பாங்காக அமர்ந்தி ருக்க,
ஏவலன் போலும் நந்தன்
எதிரினில் நின்றி ருக்க
ஆவலும் களிப்பும் முந்த
அகத்தினில் நிலைத்தி ருந்த
கோவிலைப் பற்றி நாகப்
பன்கூறத் தொடங்க லுற்றான்.

கந்தன் பள்ளிக்கூடம் கட்டுதல் நன்றெனல்

நூலறி வற்றோன் சற்றும்,
நுண்ணுணர் வென்ப தில்லோன்,
மாலுறப் பன்னிச் சொன்ன
மாற்றங்கள் கேட்டு நந்தன்,
மேலுற விளக்கிச் சால
மெல்ல அன் பாகச் சொன்னான்:
“கோலுறின் உயர்ந்த பள்ளிக்
கூடம்கோ லுதல் நன்” றென்றே.

"உயர்நிலைப் பள்ளி ஒன்றை
ஊரிலே அமைத்தோ மாயின்,
பயிர்நிலை தன்னில் உள்ள
பாலகர் படித்துத் தேர்ந்து
துயர்நிலை அனைத்தும் சாலத்
துடைத்தவ ராகி, என்றும்
செயர்நிலை தவிர்த்து வாழ்வார்;
செயத்தகும் பணியீ" தென்றான்.

106