பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          நாழிகைக் காயி ரம்சொல்
          நயமொடு கவில வல்லோன்
          ஏழைதான் வாழும் மார்க்கம்
          இனியாதென் றெண்ணுங் காலை
          தோழமை யொடுநா கப்பன்
          தொடங்கிய மொழியைக் கேட்டும்
          ஆழிதான் ஓசை யின்றி
          அடங்கிய தெனவே நின்றன்.

          அழுவதா சிரிப்ப தாவென்
          றையுற்றுக் கவிஞன் நிற்க,
          இழவிது, விழவி தென்னும்
          இயல்பறி யாநா கப்பன்,
          "உழுவதென் தொழிலொ ழிந்தால்
          உமையவள் கொழுநன் தன்னைத்
          தொழுவதென் கடமை, ஐயா!
          தொன்றுதொட் டுள்ள" தென்றன்.

          தேசுள்ள கவிஞன் மேலும்
          திகைப்புநீங் காதி ருக்க,
          மாசுள்ள மனத்தன், மாற்றார்
          மதித்திடும் அளவு கையில்
          காசுள்ள கனத்தன், "சென்று
          கடுகநாம் மீள ஓசிப்
          'பாசு’ள்ள தையா! ஏதும்
          பணச்செல வில்லை,” என்றான்.

1O