பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'பாரதம் இராம யாணம்
படிப்பித்துக் கேட்கா விட்டால்
ஊரதில் அமைதி போமென்
றுரைத்தனர் சான்றோர்; ஆக,
யாரெது செய்தா லும்,நாம்
அனைவரும் இதனைச் செய்தல்
சீரிது' வெனத்தெ ளிந்தே
சீலியூர்ச் செல்வர் செய்தார்!

அண்டையும் அருகாய் உள்ள
அயலூர்கள் தோறும் கூடிப்
பண்டைநாள் இருந்தே மெத்தப்
பணக்கார ராகி வாழ்வோர்
கண்டனம் செய்து சாலக்
கடும்பகை யுற்ற செய்தி
விண்டனர் வீடு தேடி
விரைந்துவேற் றுாரார் வந்தே.

கவிஞனின் தெளிவு
புறமிகப் புகழ்ந்து பேசப்
புலவரைப் போற்றி வாழ்ந்த
திறமிகு வள்ளல் பாரி
தீங்கறி யாதோ னாயும்,
மறமிகு மன்னர் கூடி
மடித்தகா ரணமும் இன்றே
அறமிகு கவிஞன் அங்கை
அருங்கனி எனவே கண்டான்

125