பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பத்து
முத்துாரார் செல்வப் பெருக்கம்

பிறவுள்ள தென்னே பன்னிப்
பேசாகாம் பெருமை யோடும்,
அறிவுள்ள மக்கள் கூடி
அலசியா ராய்ந்து பார்த்தே
உறவுள்ள தனைத்தும் ஓர்ந்திங்
குழைப்புமேற் கொண்டா ராயின்
பெறவுள்ள தெல்லாம் சாலப்
பெறுவரென் பதுகண் கூடே!


பாங்காகப் பதன மாகப்
படும் பாட்டின் பயனாய் வந்த
மாங்காயும் தேங்கா யும்தான்
மலைகள்போல் குவிந்த தேனும்
நீங்காமல் ஊர்க்குள் என்றும்
நிலையாக வணிகர் தங்கித்
துங்காமல் நாளும் வாங்கித்
தூரமாய்ச் சென்றே விற்றார்.

131