பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'எங்கேயும் எப்போ தும்தான்
இதுபோலக் காணேம்’ என்னக்
கொங்காய மாகத் தோட்டம்-
கோடுபா டுகளில் நட்ட
வெங்காயம் வீடு வாசல்
வீதிகள் கிரம்ப வேஒர்
பங்காய மாக விற்றுப்
பனம்பண்ணிக் கொண்டு வந்தார்


பண்ணைகள் தோறும் நாளும்
பலநூறு படிபால் விற்றும்
எண்ணிய படியே மிஞ்சி
இருந்தபால் கடையக் காய்ச்சி
உண்ணெயாய் உருக்கி மக்கள்
உண்டது போக, உள்ள
வெண்ணெயை விரும்பி வாங்கி
வெளியூரில் விற்று வந்தார்.

பத்திரப் படுத்தி வைக்கப்
பாங்கற்ற தான நல்ல
கத்தரி முருங்கை வெண்டை
கவினான புடலை யாதி-
உத்தமக் கறிகாய், மற்றும்
உள்ளாகற் பழங்கள் யாவும்
நித்தமும் கொண்டு சந்தை
நிலைகளில் விற்று வந்தார்.

132