பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பசித்தவன் தன்னைத் துங்கும்
படிசெய்து விட்டுப் பாங்காய்ப்
புசித்தவன் தனைக்கூப் பிட்டுப்
புதுவிருந் தளித்தும், வாழ்வில்
நசித்தவன் தன்னைப் பார்த்து
கையாண்டி செய்தும், நன்றாய்
வசித்தவன் தன்னை வாழ்த்தி
வரம்தந்த தெந்தத் தெய்வம்?

மறந்தொரு பொய்சொல் லாமல்
மக்களை நேசித் தன்பாய்
அறந்தனி லிருந்து சற்றும்
அகலாமல், அடக்க மாகத்
துறந்தவர் போன்றி ருந்தே
துய்மையைப் பெருக்கி வாழும்
சிறந்தவன் சிறுமை யெய்தச்
செய்திட்ட தெந்தத் தெய்வம்?

ஆழ்த்தப்பட் டார்கள் பல்லோர்
ஆரியர் சூழ்ச்சி யாலே;
வீழ்த்தப்பட் டார்கள் பல்லோர்
வேந்தர்தம் விதிக ளாலே;
தாழ்த்தப்பட் டோர்க ளாகித்
தலைமுறை பன்னுற் றின்பின்
வாழ்த்தப்பட் டார்கள் இன்றிவ்
வையத்தில் இவ்வூர் ஒன்றில்!

138