பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'யாதும்நம் ஊரே உள்ள
யாவரும் கேளிர்! என்றும்
தீதுநன் றென்ப தெல்லாம்
தெய்வத்தால் வருவ தன்று:
நோதலும் தணிதல் தானும்
நுவன்றஅவ் வாறெ'ன் றன்றே
ஒதிய பூங்குன் றன்சொல்
உண்மைக்கோர் எடுத்துக் காட்டாம்!

'நாடாக! ஒன்றோ, அன்றி
நகர்களே ஆக! மற்றும்
காடாக ஆழ்ந்த கன்ற
கடல்நதி ஏரி யாக!
கோடாக! குவடே யாகக்
குவலயம்! குறிக்கோ ளோடே
ஏடாக வாழ்வோர் உள்ள
இடம்சொர்க்கம்!'என்றாள் ஒளவை!

அன்புறுத் திடவோ, அன்றி
அறிவுறுத் திடவோ, நாளும்
பின்புறுத் திடவே உற்ற
பேச்செண்ணம் செயலுக் கேற்ப,
இன்புறுத் திடவோ, அன்றி
இதயத்தில் நோயுண் டாகத்
துன்புறுத் திடவோ நேரும்
தொடர்ந்தெல்லா மக்க ளுக்கும்!

143