பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


          துளித்துளி யாகும்; கூடித்
          துளிபேத மின்றித் தோன்றும்;
          களித்தலை யாகி வந்து
          கரையொடு குலவிக் கொஞ்சும்;
          அளித்தலே இயல்பாய் மண்ணில்
          அனைத்தையும் ஆக்கும்; நன்னீர்க்
          குளத்தினில் முங்கி உள்ளம்
          குளிர்ந்திடக் குளித்த தன்பின்,


          குக்தின்னான். எதிரில் ஆழ்ந்த
          குளம்பூத்துக் குலுங்கிற் றேனும்
          கந்தலை இடையில் சுற்றிக்
          கக்கத்தில் மகவை யேந்தி
          நொந்துசென் றவளின் தோற்றம்.
          நோக்கினில் பதிந்த தாலே
          சிந்தனை பிறிதொன் றின்றிச்
          சிலையென இருந்தான் எண்ணி.


          சோற்றுக்குக் துணிக்கும் கூட
          சொல்லொனத் துயர முற்றுக்
          கூற்றுக்காய் வாணாள் ஓட்டிக்
          குற்றுயி ராவோர் தம்மில்
          நூற்றுக்கு நூறு பேரும்
          நுண்கலை கற்று மாற்றார்
          போற்றவே வாழும் நன்னாள்
          பொருந்திடச் செய்வே னின்றே

17