பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 “சொல்லுக்குத் தோற்ற தின்றித்
          தொல்லுல கெல்லாம்” என்று
          'கல்'லெனச் சிரித்து விட்டுக்
          கால்முகம் கழுவு தற்காய்க்
          கொல்லைக்குள் செல்ல லானார்
          கொழுநனும் கவிஞன் தானும்;
          இல்லுக்குள் விரைந்து சென்றாள்
          எழில்வடி வான நல்லாள்.

          மணையிட, வந்தோர் குந்த,
          மடமயில் இலைகள் போட்டுப்
          பணிவுடன் சோறும் சாறும்
          பசுவின்நெய் பொரிய லோடும்
          உணவிட, உரையா டாமல்
          உண்டெழுந் தமர்ந்த தன்பின்,
          துணிவுடன் கேட்டாள்: “இன்றித்
          தொல்லையேன் தோன்றிற்” றென்றே.

          நங்தன், சாந்தியின் சம்மதம் கேட்டல்
          “நெல்லையும் பதரை யும்நாம்
          நேர்நிறை யாகக் கூட்டித்
          தில்லையோன் அருளால் விற்றுத்
          திருவாளர் ஆன தாலே,
          'தொல்லையோ தொல்லை' யென்று
          தொழிலாளர் போடும் கூச்சல்
          எல்லையைக் கடக்தொ லிககும்
          எதிரொலித் தொல்லை! நிற்க,

28