பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          என்றனன் மகிழ்ந்து நந்தன்.
          இசைந்திருந் தெல்லாம் கேட்ட,
          குன்றின் மீதொளிர வைத்துக்
          கொளுத்திய விளக்கன் னோனும்
          'நன்றிது, நன்றி' தென்று
          நகைமுகம் காட்டித் தூங்கச்
          சென்றனன். நந்தன் மெல்லச்
          செல்வியின் கையைப் பற்றி,

          "சொல்நலம் பெற்ற உன்னைத்
          துணைவியாய்ப் பெற்ற தாலே,
          தொல்நலம் பெற்றிவ் வூரும்
          துயர்நீங்கப் பெறுவ தொன்று;
          இல்நலம் பெற்று நாமும்
          இசைநனி பெறுவ தொன்று;
          பல்நலம் பெற்றேன், வைத்தேன்
          பவளத்தில் முத்தம்," என்றான்.

32