பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காடுண்டு; தோட்ட முண்டு;
கழனியும் தோப்பு முண்டு;
மாடுண்டு; கோழி, ஆடு,
மனிதர்க ளுண்டு; மாடி
வீடுண்டு; விளைவு முண்டு;
வினயமுண் டென்னின் மற்றோர்
கோடுண்டு கொல்லோ நந்தன்
குடும்பத்தி லின்பத் திற்கும்!

செய்தி ஊரில் பரவுதல்

யாரெது செய்த போதும்
அதுகூடிக் குறைந்தப் போதே
பாரதில் பரவு கின்ற
பழக்கத்தால், அன்று நந்தன்
'சீரிது' வென்று செய்த
செய்கையும் செய்தி யாகி
ஊரதில் மெல்ல ஊர்ந்தும்,
ஓடியும் உலவிற் றன்றே.

நாகப்பன்சினமும், கிட்டனின் தீயஇயல்பும்

'கட்டிய கறவை கன்றைக்
காடியில் மாற்றிக் கட்டிக்
கொட்டிலைக் கூட்டிக் கோழிக்
கூட்டையும் சுத்தம் பண்ணி,
இட்டது தொட்ட தெல்லாம்
இருட்டிடும் வரையும் செய்யும்
தொட்டிச்சி எங்கே தான்போய்த்
தொலைக்தாளோ, என்று நொந்து,

37