பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞனென் றொருவன் வந்து
கால்வைத்த முதலாய் ஊரில்,
உலைஞரென் றுள்ளோ ரெல்லாம்
உடலுளம் மலரு கின்றார்.
விலைஞரும் வியாபா ரத்தில்
விலையேற்றி இறக்கஞ் செய்யார்;
கொலைஞரும் கூடக் கொஞ்சம்
குணங்காணு கின்றார்" என்றார்.

'என்னப்பா' என்னும் முன்பே
எழுந்து வேல் கம்பை ஏந்தும்
பொன்னப்பன் கூட இன்று
பொறுமையை உபதே சித்தால்,
மன்னிப்ப தன்றி வேறு
மார்க்கங்கா ணாநா கப்பன்
உன்னிப்பாய்க் கேட்டுக் குந்தி
உளங்குன்ற, எழுந்து சென்றார்.

கிட்டன் நாகப்பனைக் கண்டு
கவிஞன் உரைத்த மொழி கூறல்

இருவரும் எழுந்து செல்வ
தெதிர்பார்த்த படியே அந்தத்
தெருவினில் பதுங்கி நின்ற
திருடன் தீக் கொள்ளி, முற்றும்
நரிவருக் கத்தைச் சேர்ந்த
நஞ்சினை யொத்த கிட்டன்
வருவதை நாகப் பன்தன்
வருத்தமும் தீரக் கண்டான்.

44