பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான்கு

அதிகாலையில் நந்தன்
வயலுக்குச் சென்று பயிர் காணுதல்

திருப்பங்கள், கோணல் மாணல்
சேறிடை விரவி யுள்ள
வரப்புகள், வாய்க்கால் தோறும்
வழக்கம்போல் அன்றும் காலை
செருப்புகள் இருக்கக் காலில்
சிறுபோதும் வீணா காமல்
விருப்புடன் நடந்து சென்றான்,
வேளாள னான நந்தன்.

வயலிடைத் தண்ணீர் பாய்ந்து
வடிவதும், வடிந்த நீரில்
கயலிடை யேறி நீந்திக்
களிப்பதும், கவன மாக,
இயலிடை இசையில் தேறி
இன்புறும் மகளிர் போலச்
செயலிடை எருமண் நீரால்
செழித்திடும் பயிரைக் கண்டான்.

47