பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          வெளிப்பண்பு காட்டத் தக்க
          விலைமதிப் புடைய ஆடை,
          வளப்பண்பு காட்டத் தங்கம்
          வயிரமாய் அணிந்தும் பூண்டும்
          ஒளிப்பண்பு காட்ட மாட்டா
          துருகுவார் கண்டு நாண
          உளப்பண்பு காட்டிச் சாந்தி
          உலகுக்கோர் விளக்க மானாள்.

          மருந்தாகித் தப்பா நல்ல
          மரமொத்தார் மனையை நாடி
          வருக்தினோர் வந்தார்; நன்றாய்
          வயிறார உண்டு வாழ்த்த
          விருந்திட்டார்; என்று பன்னி
          விளம்புதல் விணே! சாலத்
          திருந்தினார் இல்லத் தெல்லாம்
          திருத்தமாய் நடக்கு மன்றோ?

          வந்தவர் புல்பார மேற்றிச் செல்லல்
          உண்டபின் எழுந்து நந்தன்
          உவப்புடன் வீட்டுக் கொல்லை
          அண்டையில் இருந்த புல்போர்க்
          கவர்களை அழைத்துக் காட்டி,
          “வண்டியில் பாரம் ஏற்றி
          வகையாகக் கட்டி நீங்கள்
          கொண்டினிச் செல்வீர்! மெல்லக்
          கொடுக்கலாம் பணத்தை” என்றான்.

52