பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          பிள்ளையார் மேல் மாலை பாடித்தர
          வேண்டக் கவிஞன் மறுத்தல்
          “இருப்பொன்று கையில் உங்கட்
          கென்றென்றும் இருக்க ஈவேன்;
          விருப்பொன்று நெஞ்சில்; நீங்கள்
          விரைந்ததை முடித்துத் தாரும்!
          பொருப்பொன்றி நின்ற ஈசன்
          புதல்வரில் மூத்தோன், வெள்ளை
          மருப்பொன்று பிள்ளை யார்மேல்
          மாலையொன் றியற்றி," என்றான்.

          பிள்ளையார் மீதில் நானோர்
          பிரபந்தம் பாடித் தந்தால்
          அள்ளிநீர் ரொக்கம் தந்தென்
          அகக்குறை தீர்ப்பீர்! ஆனால்,
          “எள்ளள வேனும் நன்மை
          ஈயா நூல் இது'வென் றெற்றித்
          தள்ளுவர் ஐயா! இன்று
          தமிழாய்ந்த தக்கோர் எல்லாம்.

          உழைப்பின்றி நற்கதி நாடுவோரைக்
          கவிஞன் இகழ்தல்
          தாவாரம் தேடார்; என்றும்
          தரணிவாழ் விகழ்வார் செய்த
          தேவாரம் தினமும் பாடித்
          திகழ்பவர் பக்த ராகி,
          நாவாரப் பழம்பால் உண்டு
          நற்கதி தேட வேஇக்
          காவேரி பாயும் நாடும்
          காயுது பசியால் காணீர்!

64