பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          சின்னப்பன் கவிஞனை வரவேற்று
          இளநீர் கொடுத்து உபசரித்தல்
          உறுவெயில் தனிலே வந்தங்
          கொன்றியாய் நின்று நோக்கி
          முறுவலைச் சிந்தும் நல்ல
          முதுபெருங் கவிஞன் தன்னை,
          சிறுவயல் வரப்பைக் கொத்தித்
          திருத்தும் சின் னப்பன் பார்த்துத்
          துறுவவந் தையா! வாரும்
          எனத்தொழு தழைத்துச் சென்றான்.

          “குப்பையும் தழையும் என்று
          கொள்வன கொஞ்சம் கொண்டு,
          முப்பது நாட்கள் பாடு
          முன்னூறு நாட்கள் சோறு
          தப்பாது தந்து காக்கும்
          தாய்க்குநீர் தனையன் ஆனீர்
          'ஒப்பெதூம் இல்லா உங்கள்
          உழுதொழில் செழிக்க," என்றான்.

          கவிஞனைக் கண்ணில் கண்டான்;
          கவிதையைக் காதில் கேட்டான்;
          நவையறு நல்லோன் ஆங்கே
          நனிமகிழ் வெய்தி, “நாடிச்
          சுவைமிகு இளநீர் பார்த்துச்
          சுருக்காக மரத்தில் ஏறிக்
          குவையுறு குலையாய் வெட்டிக்
          கொண்டுவா குப்பா!" என்றான்.

69