பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"படமாடும் கோவில் கொண்ட
பகவற்கொன் றீயின், என்றும்
நடமாடும் கோவில் கொண்ட
நம் பற்கிங் காகா திங்கே
நடமாடுங் கோவில் கொண்ட
நம்பற்கொன் றீயின் அன்றே
படமாடுங் கோவில் கொண்ட
பகவற்கங் காகும்’ என்றார்.

உம்மிடம் கூறு கின்றேன்
ஊன்றியா ராயு மாறே;
நம்மிடம் பணமுங் காசும்
நகைகளும் பெற்றுக் கொண்டு
தம்மிடம் உள்ள சொர்க்கம்
தருகின்ற தென்றால் தெய்வம்
இம்மடம் போலெங் கேனும்
இனியொரு மடம் உண் டாமோ?

குற்றமும் குறையும் இன்றிக்
குவலயத் திருக்குங் காறும்,
நெற்றிநீர் நிலத்தில் வீழ
நித்தமும் பாடு பட்டோர்
முற்றத்தில் வந்து நின்று
முறையிட்டும் இரங்கோ மாகி
மற்றைய மறையோர் உண்டு
மகிழ்ந்திட மடத்துக் கீந்தோம்.

73