பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உடையிலே துய்மை சேர
உணவிலே சுவையும் சேர
எடையிலே ஏற்றம் சேர
இதயத்தில் அறிவு சேர
நடையிலே ஒழுக்கம் சேர
நன்மொழி செவியில் சேர
விடையிலே மென்மை சேர
விளக்கம்சேர்க் திருக்க லானர்.

சப்பரம் தனில் உட் கார்ந்து,
‘சாமிநான் சுமப்பீர்; என்னும்
சுப்பிரர் சூதால் கெஞ்சில்
சூழ்ந்தமா சனைத்தும் நீங்கித்
துப்புர வடைந்தார்; வாழும்
தொழிலையும் தேர்ந்தார்; நந்தன்
ஒப்புர வென்னும் கொள்கை
ஒன்றைமேற் கொண்ட தாலே.

ஒப்பிட்டுச் சொல்ல ஒண்ணா
ஒண்சுவை விருந்துச் சோறன்
றுப்புட்டுப் பழம்நெய் தேனே
டுறுகாய் பொரியல் கூட்டு,
சப்பிட்டு மென்று நக்கிச்
சாப்பிட்ட பிறகு நந்தன்
துப்பிட்டுப் பன்னி மெல்லத்
தோழர்க்குச் சொல்ல லுற்றான்.

76