பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கரம் கூப்பித் தரையில் வீழ்ந்து
கால் பற்றிக் கண்ணீர் சோர,
"திரம் கூப்பி உடலும் தேய்ந்தென்"
சிரம்சாயும் காறும், உம்மை
மரம் கூப்பிக் காய்ந்த ஒன்றை
மறுமுறை தழைக்க வைக்க’
வரம்கூப்பிட் டீந்த தெய்வம்
எனத்தொழு தெழுவேன்," என்றான்.

"வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும்
வாய்ப்பெனக் கில்லை," என்றே
இணக்கமாய்க் கைகள் பற்றி
எழுப்பிஅன் பொழுக நோக்கி,
"மணக்கின்ற மலர்போல், கிட்டா
மண்ணகம் கமழு மாறே
குணக்குன்றாய் இருந்த வாழ்நீ"
எனக்கூறி விடையும் தந்தான்.

சிறுகாளியின் விருப்பமறிந்து
வெள்ளாடு வாங்கப் பணந்தந்தனுப்புதல்

 
கரப்புமீ துார்ந்து வாழும்
கனவானின் முன்கை கட்டி,
நிரப்புமீ தூர்ந்து நின்றான்
நினைப்பினை அறிய எண்ணி,
சிரிப்புமீ தூர்ந்து நந்தன்,
" சிறுகாளி! சிந்தித் தேநீ
விருப்புமீ தூர்ந்து செய்யும்
வினையாது? விளம்பு’’ கென்றான்

79