பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          வீட்டுக்குச் சொந்த மான
          வெற்றிடம் உண்டு; கோழிக்
          கூட்டுக்கும் பொருத்தம்; சுற்றிக்
          குளுமையாய் வேலி; என்றன்
          பாட்டுக்குப் போது மான
          பயன்பெறப் பேணிக் காத்திந்
          நாட்டுக்கு முட்டை கோழி
          நயம் பட விற்பேன், என்றாள்.

          நந்தன் கேட்டு மகிழ்ந்து உதவ உடன்படல்
          தெரித்தநல் முத்தாய் அங்கத்
          தெரிவையன் றுதிர்த்த சொல்லின்
          கருத்தினை யோர்ந்து நந்தன்,
          கல்லெனச் சிரித்துச் சாலப்
          பொருத்தமாய் உரைத் தாய்; அம்மா!
          போயிற்றென் வருத்த மெல்லாம்.
          திருத்தமாய் அனைத்தும் நானே
          தேர்ந்துசெய் தளிப்பேன், தீர.

          அறுபது- சாதிக் கோழிக்
          கமையும்அவ் விடம்தான் என்றால்,
          பெறுவது நாற்பத் தைந்து
          முட்டைகள் பின்முன் னாகும்;
          உறுவது பதினென் றேகால்
          ஒருநாளில் வரவி ரைக்காய்
          மறுஅதில் இன்றிச் செய்தால்,
          மாதம்நூ றாகும் மீதி.

85