பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          பெருங்கையின் அளவு போதும்
          பெரிதும்ம விரும்பு கின்ற
          முருங்கையின் கொம்பி ரண்டை
          முழஆழம் தோண்டி நட்டே
          'இருங்கிளை இவைந மக்கென்
          றெண்ணியே வளர்த்து வந்தால்,
          ஒருங்குகாய்த் தளித்துக் காசின்
          உருவத்தைப் பணமாய் மாற்றும்.

          கால்முகங் கழுவும் நீரும்,
          கலயங்கள் கழுவும் நீரும்,
          மேல்முகில் நீரும், மற்றும்
          மேனிக்கு வார்க்கும் நீரும்
          மால் முறைப் படிதான் மண்ணில்
          மறைந்துவி ணாக மல்,நீ
          பால்முளை வாழை நட்டால்
          பணம் முற்றும் நோட்டாய் மாறும்.

          "ஊதியம்’ என்னும் சொல்லுக்
          குழைப்பெ'னும் சொல்தாய் என்றே
          ஒதிய சொல்லி தொன்றை
          ஒருபோதும் மறக்க வேண்டாம்;
          நீதியும் இதுவே: வாழும்
          நெறிமுறை இதுவே ஆயின்
          போதிய சுகம னைத்தும்
          பொருந்திநீ வாழ்வாய், என்றே.

87