பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


          பலவழி தனிலும் எண்ணிப்
          பகைதனை வளர்ப்ப தற்குச்
          செலவழிப் பதுவே சேர்த்த
          செல்வத்தின் பயனென் றோர்ந்து,
          நிலவொளி செய்யும் நல்ல
          நேரத்தில், ஒருநாள் விட்டில்
          புலவிழி விருந்து செய்து
          பொன்னனை அழைத்துண் பித்தான்.

          வாக்குரம் அற்றோ னேனும்
          வயிரம்போன் றுடல்கட் டுள்ளோன்;
          மூக்கறும் போதும் கூட
          முகந்துளி சுழிக்க மாட்டான்;
          நோக்குறின் யார்க்கும் நெஞ்சு
          நோயுறும்; நுடங்கல் இல்லோன்;
          போக்கிரி என்னும் பட்டம்
          பொருந்தினோன் பொல்லாப் பொன்னன்.

          உண்டபின் எழுந்து வந்தங்
          கொழிவான இடத்தில், பட்டுத்
          திண்டினில் சாய்ந்து சாலத்
          திருப்தியாய் நாகப் பன்தான்
          அண்டையில் பொன்னன் தன்னை
          அமரவைத் தடக்க மாக,
          "முண்டனிக் கவிஞ னாலே
          முளுது தொல்லை, என்றான்.

90