பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிரவன் எழுதல் கானன்;
காவினில் காமர் வண்டு
புதுமலர்த் தேனை யுண்டு
புலன்கொளப் பாடக் கானன்;
நதிகுளக் கரைகள் காடி
நாரைகள் பறத்தல் கானன்;
எதிர்ப்படும் இனிய காட்சி
எதுவொன்றும் காண னைன்.

'வானத்தை அடைய வேண்டி
வையத்தில் வாழ்ந்த முன்னேர்.
ஞானத்தை யன்றே நாடி
நற்பொரு ளாகச் சேர்த்தார்!
மானத்தை மறந்து காசே
மதித்திடும் பொருளாய்த் தேடி
ஈனத்தை யடைத லேனே
இரண்டுங்கெட் டான்க ளின்று."

மன்றினில் குழந்தை யொன்று
மகிழ்ச்சியாய்க் கையில் வைத்துத்
தின்றுகொண் டிருந்த கல்ல
தித்திக்கும் தின்பண் டத்தை,
புன்றெளில் காக்கை தானும்
'பொசுக்கெ'னப் பறித்துக் கொண்டு.
சென்றதை ஒக்கும் ஏழை
சேர்த்திடும் கூலிக் காசும்!

8