பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          வாழ்நிலை தவறி, உள்ள
          வறுமையின் கார ணத்தால்
          பாழ்நிலை தேரும் நாகப்
          பன் துாண்டப் பட்ட தால்முன்
          சூழ்நிலைக் கேற்பப் பொன்னன்
          சுத்தமாய்க் கெட்டோ னேனும்,
          ஊழ்நிலை யாயின் றூரின்
          உயர்நிலை உணர்ந்தி ருந்தான்.

          'தொல்லையும் கவிஞ னாலே
          தொடர்கின்ற தெனவே சொன்ன
          சொல்லையும் பொன்னன் கேட்டுச்
          சொல்லுவான் சுருக்க மாக: '
          எல்லையில் லாத மேம்பா
          டெய்திற்றுார் எனவே, இன்றோர்
          புல்லையும் கூடக் கேட்டால்
          புகலுமே அண்ணா என்றே.

          அறம்பேணான்; அன்பு பேணான்;
          ஆண்மையின் ஆக்கம் பேணான்;
          திறம்பேணான்; தேசம், தெய்வம்
          தெளிந்துநற் செயலும் பேணான் :
          புறம் பேணான்; பொழுது பூரா
          பொய்கொலை களவு சூது
          மறம்பேணா நின்றான் சுத்த
          மடச் சாம்பி ராணி யானோன்.

91