பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          'பொன்னனுக் கிட்ட சோறும்
          போயிற்று வீணாய்' என்றே
          உன்னியே உள்ளம் நொந்தாங்
          கூமைபோல் இருந்து, மெல்லப்
          பின்னரும் சொல்வான்: “பொன்னா!
          பெரியதோர் சாது வாகி.
          என்னசா திக்க எண்ணி
          இருக்கின்றாய் இனிநீ," என்றே.

          பொன்னன் நந்தனின்
          ஒப்புரவைப் புகழ்தல்

          “ஆக்கிய சோற்றைத் தின்றின்
          றன்றுபோல் கலகம் பண்ணி,
          'போக்கிரி' என்னும் பட்டம்
          பொருந்திட இனியும் வாழ்ந்தால்
          நாக்கறுத் தென்னை நன்றாய்
          நைந்திடப் புடைத்தூர் விட்டே
          நீக்குவர், அண்ணா! ஊரின்
          நிலையிது; நினைப்பீர்! நீரும்.

          கிட்டனின் மாட்டைக் கண்டும்,
          கிறுக்கன் அச் சிறுகா ளிக்குப்
          பட்டியா டிருக்கக் கண்டும்,
          பாவம்! திக் கற்ற ஏழைத்
          தொட்டிப்பெண் கோழி வைத்துத்
          தூய்மையாய் வாழக் கண்டும்,
          துட்டனென் றினியார் ஊரில்
          தோன்றிட வல்லார், சொல்வீர்!

}}

92