பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிணங்கிய வூறு விட்டுப்
பிரியமாய் முகம்ம லர்ந்து
வணங்கிய வாறு நாகப்
பன்வரக் கவிஞன் கண்டே,
இணங்கிய வாறு நோக்கி,
இன்முகம் காட்டி, வாழ்த்தி
மணங்கயம் மாறி வீசும்.
மலர்பூத்த மறுகில் நின்றான்.

கோவில் எழுப்புமாறு நாகப்பன் வேண்டலும்
கவிஞன் மறுமொழியும்


“வேண்டுதல் சிலமுன் செய்தும்
வெறுத்தெனை ஒதுக்கி னீர்நீர்!
மூண்டபே ரார்வம் இன்றும்
முடுக்கிட வந்து கெஞ்சி
மீண்டும் நான் வேண்டு கின்றேன்,
மிகப்பணிந் தையா! நெஞ்சில்
பூண்டஎன் விரதம் முற்றிப்
புகழ்பொலிந் திடுமா றாக!

பாயிரம் நூலுக் கேற்பப்
பாடிவைப் பதுபோல், ஊர்க்குள்
கோயிலும் அமைக்க!' வென்று
கூறினர் சான்றோர் கூடி;
நேயர்கள் சேர்த்த தோடும்,
நேர்ந்துநான் ஈந்த தைம்ப
தாயிரம் ரூபாய் உண்டிவ்
வாலயப் பணிக்காய், ஐயா!

98