பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏடான ஏட னைத்தும்
இதயத்தில் வைத்துப் பாடி
கோடான கோடி மக்கள்
கோவிலுக் கெனவே பட்ட
பாடான பாட னைத்தும்
பயனின்றிப் பாழாய்ப் போக,
வீடான வீட னைத்தும்
வெறுமையுற் றிருக்கக் காணீர்!


உடலொரு கோவில்; தெய்வம்
உள்ளத்தில் உள்ளான் என்றே
திடமுடன் நம்பி, மக்கள்
திருத்தமாய்ச் செய்வ செய்தால்,
கடல்சூழ்ந்த ஞால மெல்லாம்
களிப்புற்று வாழக் காண்பீர்!
நடக்கலாம், மேலும் பேச
நாழிகை இலையே," என்றான்.

102