பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையற்ற வாழ்க்கை இருப்பது பொய், இறப்பது மெய் என்பது மெய் நூல்களே ஆராய்ந்த மெய்யறிவினரது துணிபு. தோன்றல், திரிதல், அழிதல் என்பவை இயற்கை நிகழ்ச்சிகள். மெய்ப்பொருளே ஆய்ந்த பண்டைப் பெரியார்கள் இவற்றை நன்கு உண்ர்த்தி யிருக்கிருர்கள். இன்றைய பொருளியல் ஆராய்ச்சி வல்லுநரும் இதையே தான் கூறுகிருர்கள். ஞானிகளும் விஞ்ஞானிகளும் கண்ட உண்மைகளைப் படித்து ஆராய்பவர்கள். இருவரது கூற்றுக்களும் ஒரேமாதிரி யிருப்பதை அறிவார்கள். ஞானிகளது உண்மைகள் உணர்வு நிலையைத் தொடும்; விஞ்ஞானிகளது உண்மைகள் அறிவுக்கு விருந்தாக விருக்கும். மனித வாழ்க்கையின் அளவைக் கணக்கிடு வதற்குக் கருவியாக விருப்பது காலம் என்னும் அருவப் பொருள். காலத்தை அளக்கமுடியாது என்பதை உணர்ந்தவர்கள் ஒரு சிலர்தாம். ஆனால் பெரும் பாலோர் அளந்துவிட்டதாக இறுமாந்திருக்கிருர்கள். உருவப்பொருளே அளப்பது எளிது. உருவப்பொருளே நீட்டல் அளவை, முகத்தல் அளவை கிறுத்தல் அளவை, எண்ணல் அளவை ஆகிய அளவைகளால் அளக்க முடியும். உலகத்தில் மக்கள் துணியை முழக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/101&oldid=781486" இலிருந்து மீள்விக்கப்பட்டது