பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவு காளைகள் 83 தமிழ் ாட்டில் மூவேந்தர்கள் ஆண்டுவந்த காலத்தில் காவிரிக் கரையில் வாழ்ந்த மக்களின் நாகரீகம் இமயம் வரை சென்றது. கரிகாற்சோழன், சேரன் செங்குட்டுவன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் போன்ற தமிழரசர்கள் வாழ்ந்த காலத்தில் காவிரிக் கரையில் வாழ்ந்த தமிழர்களின் காள்கம் இந்திய நாடெங்கும் பரவியது. இங்ங்னம் தமிழ்நாடு வளம் பெற்றிருந்த காலத் தில் பல பாவலர்கள் காட்டில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஏராளமாகப் பாக்களைப் பாடி மக்களுக்கு செவியுணவு கொடுத்து வந்தனர். இவர்கள் தமிழர் களது வாழ்க்கைக்கு உயிராயிருந்த அமிழ்தினுமினிய தமிழ் மொழியை வளம்படுத்தி வந்தனர்; அதனேட மையாது மனிதர்களைப் புனிதப் படுத்தியும் வந்தனர். பொதுவாகப் பாவலர்களைக் கற்பனைக் களஞ்சி யங்கள் என்றேசொல்லலாம். இழிந்த உலோகங்களையும் உயர்ந்த பொன்னுக்கும் இரசவாதிபோன்றவர்கள். பொது மக்களின் எண்ணங்களையும் உயர்ந்த கிலேக்குக் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். திருத்தக்க தேவர் என்பவர் ஒரு சிறந்த பாவலர். ஐம்பெருங்கள்ப்பியங்களில் ஒன்ருகிய சீவகசிந்தா மணியை ஆக்கித் தமிழ்த் தாய்க்குக் காணிக்கையாகத் தந்து பெருமைப் படுத்தியவர். ஒரு நாள் தேவர் ஒரு வயல் வழியாகச் செல்ல நேர்ந்தது. மருதநிலத்தில் வாழும் மக்கள் நல்ல மாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/107&oldid=781499" இலிருந்து மீள்விக்கப்பட்டது