பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை அரங்கு நாடகமே உலகம்' என்பது உலக வாழ்க்கை யில் தெவிட்டி கிற்பவரது திருவாக்கு. உலகத்தை ஒரு நாடக அரங்காகவும், உலகிலுள்ள மக்களேயெல் லாம் நாடக உறுப்பினர்களாகவும் உவமித்து நமது காட்டுக் கவிஞர்களும் மேல்நாட்டு கவிஞர்களும் பாடி யிருக்கின்றனர். அவைகளைப் படிக்குங்கால் அவை நமது உள்ளங்களேத் திருத்தி உணர்ச்சிகளேத் தட்டி எழுப்புகின்றன, கமது மனமும் தன்னே மறந்து நிற்கிறது. பொதுவாக மனிதர்கள் இன்பத்தையே விரும்பு கிருர்கள்; துன்பத்தை வெறுக்கிருர்கள். உயிர் வாழ் வன அனைத்திற்கும் இம்முறை பொருந்தும். மனித வாழ்க்கையில் விரும்பியவை விலகிப் போவதும் வெறுப்பவை விரைந்து எதிர் வருவதும் நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள். நினேந்தவை நினைந்தபடி கடவாத்தால் மனிதன் கலக்கமுறுகின்ருன், ஏங்கிப் பரிதவிக்கின்ருன். வாழ்க்கையிலேயே அவனுக்கு ஒரு வெறுப்புத் தட்டுகிறது. நாடகமே உலகம் நாளே நடப்பதை யாரறிவார் என்ற வேதாந்த அலே அவனது மனத்தில் எழுகிறது; அது அவனுக்குச் சற்று அமைதி யையும் தருகின்றது. இந்த நிலையில் உள்ள மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/111&oldid=781509" இலிருந்து மீள்விக்கப்பட்டது