பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கவிஞன் உள்ளம் ணுக்குப் பாவலர் பாக்கள் மன அமைதியைக் கொடுக் கும். பாக்களேக் கருத்துன்றிப்படிக்குங்கால் மனிதன் தின்னேயே மறந்து விடுகின்ருன். அவனுக்கு உலப்பிலா ஆனந்தம் உண்டாகிறது. இயற்கைக் காட்சிகளை வருணிப்பதில் வொர் ட்ஸ் வொர்த்’ என்ற ஆங்கிலப்பாவலர் வித்தகர் என்று சொல்லுவார்கள். நமது காட்டில் எத்தனையோ வொர்ட்ஸ் வொர்த்துகள் இருந்திருக்கிருர்கள். இயற்கை வருணனைகளுடன் கற்பனை கயங்களேயும் கலந்து தருவதில் நமது தமிழ்ப் பாவலர்கள் பேர் போனவர்கள். அந்தக்காலத்தில் சடையப்ப வள்ளல் ஒரு பெரிய கிலக்கிழார். கம்பரை ஆதரித்தவர். அன்பு கனிந்து விருந்து ஒம்புவதில் பெரும்பாலும் கிலக்கிழார்களே எவரும் மிஞ்ச முடியாது; அன்புருவானவர்கள். கம்பர் எப்போதும் அவருடனே இருப்பது வழக்கம். ஒருக்கால் கார் காலத்தில் சடையப்ப வள்ளல் நிலத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்ருர், கம்பரும் கூடச் சென்ருர். அன்று அவர்கள் பல காட்சிகளைக் கண்டார் கள். இருவரும் அல்வகளைப்பார்த்தாலும், பாவலன் உள்ளந்தான் அவற்றைக் கவர்ந்தது. அவர்கள் புறப்படும்போது வெயிலே இல்லே. மாலைக்காலம்; வானத்தில் கரிய மேகங்கள் உலவின. இடியின் குமுறல்கள் கேட்டன. மேகங்களைக் கண்ட வுட்ன் சோலயில் மயில்கள் தோகைகளே விரித்தாடின் குளிங்களில் தாமரை மலர்கள் பூத்தவை குவிந்திருந்தன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/112&oldid=781511" இலிருந்து மீள்விக்கப்பட்டது