பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை அரங்கு §5 நீலநிறமுள்ள குவளை மலர்கள் மலர்வனவாய்க் காணப் பட்டன. மெதுவாக வீசிய காற்றினல், குளத்தின் நீரில் சிறிது அலைகளும் இருந்தன. இவைதாம் அன்று அவர்கள் கண்ட காட்சிகள். அவை கம்பர் கருத்தில் வேரூன்றி விட்டன. தான் இராமாயணத்தைப் பாடுங் கால், இக்கருத்தைப் பயன்படுத்திக்கொண்டார். இராமாயணத்தில் கோசல நாட்டின் வளப் பத்தைக் கூறுங்கால் இக்கருத்து வெளிப்படுகிறது. இயற்கையையே ஒரு நாடக மேடையாக்கி விடுகிருர், தான் முன் கண்ட காட்சிகளைத் தனது கற்பனைத் திறத் தினுல் மாற்றிக் கொலு வீற்றிருக்கும் அரசன் ஒரு வனேக் காட்டுகிருர், மனிதர்களின் அரசன் அல்லன். இயற்கையின் அரசன், மருத நிலமாகிய அரசன். உலகில் அரசன் கொலு விருக்கையில் நாம் காணும் காட்சிகளைப் போலவே, மருதத்திணை அரச னின் அவையிலும் பாவலர் பல காட்சிகளைக் காட்டு கிருர், சேலையைப் பிடித்துக்கொண்டு விரித்தாடும் நடன மாதர்களேப்போலவே, மயில்கள் தோகைகளை விரித்தாடுகின்றன. விளக்குகளைத் தாங்கி நிற்கும் மகளிர்களைப்போலவே, தாமரைக் கொடிகள் கூம்பிய மலர்களேத் தாங்கி நிற்கின்றன. மத்தளக்காரர்கள் மத்தளத்திலிருந்து ஒலிகளைக் கிளப்புவதுபோலவே, மேகங்கள் இடிமுழக்கம் செய்து கிற்கின்றன. கூத்துப் பார்ப்பவராகக் குவளைக் கொடிகள் உள்ளன. அக் குவளைக் கொடிகளாகிய பார்ப்பவர்கள் மலராகிய கண் ளுல் பார்க்கின்றனர் யாழ்ப்பாணர்கள் இனிய ஒலியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/113&oldid=781513" இலிருந்து மீள்விக்கப்பட்டது