பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டைச் சேவியர் 105 நிறைமொழி இறப்பு, நிகழ்வு, எதிர்காலங்களிலும் சென்று அவர்கள் எண்ணியதனைச் செய்யும் வல்லன்ம வாய்ந்தது. இராமனேக் கரிய செம்மல்" என்கிருர் பாவலர். சூல்கொண்ட மழைக்கொண்டல் வண்ணகிைய இராமனது உடலுக்கு ஏற்ற உவமைதான். தாடகையை அல் ஒக்கும் நிறத்தினுள் எனக் குறிப்பிடுகிரு.ர். அல் என்பது இருட்டு. தாடகையை இருள் நிறத்தவள் என்று கூறுவது மிகப் பொருந்தும். கொடுந்தொழிலேயுடையவர்கள் யாவரும் மிகக் கரிய நிறமுள்ளவர்களாயிருப்பர் என்பது நூலார் கொள்கை. இராக்கதர்கள் தித்தொழிலையுடையவர்களாதலால் கரிய நிறமுடையவர்கள் என்பது கூறப்படுகிறது. இராமனது அம்பு தாடகையின் நெஞ்சில் பாய் கிறது. அங்கெஞ்சு அவ்வளவு எளியதா? இல்லை. தசையாலான நெஞ்சுதான் ; ஆனால் அங்கு அருள் இரக்கம் முதலிய கற்குணங்களுக்கு இடமே இல்லை. நாள்தோறும் பலமுறையில் கொடுஞ்செயல்களைச் செய்து அவளது நெஞ்சம் வைரம்போல் ஆய்விடுகிறது: அவ்வளவு கெட்டியாக ஆய்விடுகிறது. இதைக் கம்பர் வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சு எனக் குறிப்பிடு கிருர். சரியான உவமானந்தான். அவர்அழுத்தமான பேர்வழி' என்று சொன் ஞல், ஏனையவர்களின் உடலைவிட அவரது உடல் கெட்டியாக இருக்கும் என்பது பொருள் அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/123&oldid=781535" இலிருந்து மீள்விக்கப்பட்டது