பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டைச் செவியர் 107 எனப்போயிற்று அன்றே" எனக்கூறுகிருர் கம்பர். * * - - * - - சொற்களில் ஒட்டைச் செவியின் நிலையை உணரவைத் திருப்பது உவகை பயக்கிறது. ' கல்லாத புல்லர்க்கு கல்லோர் சொன்ன பொருள் எனப்போயிற்று அன்றே" என்பதில் எவ் வளவு புதை பொருள் இருக்கிறது . இச்சொற் ருெடரை ஆழ்ந்து வார்க்கப் பார்க்கப் பல உண்மைப் பொருள்கள் வெளிப்படுகின்றன. கம்பரது உலகிய லறிவு வெளிப்படுகிறது; மனிதர்களின் இயற்கையைக் கூர்ந்து கவனித்திருக்கும் மதிநுட்பம் தெரியவருகிறது. சொல் என்பது ஒலிவடிவம்; ஒருவர் சொல்லும் சொல் எவர் காதிலும் எளிதாய் விழும். காதில் சொல் விழுவதற்கு அறிவு தேவையில்லே. அத்தகைய சொல் மூடர் காதிலும் விழும்; ஆனால் அதன் பொருள் அவர் கள் மூளைக்கு எட்டாது. ஆகவே அவர்கள் கெஞ்சில் கற்பொருள் தங்காது ஓடிப்போகும். இதையே கம்பர் சொல் ஒக்கும் சரம் பொருள் எனப்போய்விட்டது என்று குறிப்பிடுகிரு.ர். இளமையில் வசதிக்குறைவால் எவவளவோ பேர் படிப்பதில்லை. ஆனல் அவர்களில் பலர் கல்லவர் களாக இருக்கிரு.ர்கள் பலர் தீயர்களாகவும் இருக் கிருர்கள். இக்கல்லாமையோடு தீக்குணமும் தீகடத் தையுமுள்ளவர்களுக்கு நல்லவர்கள் எதைச் சொன்ன லும், அது அவர்கள் நெஞ்சில் தைக்காது. இவர்களைத் தான் கல்லாத புல்லர்" எனக்குறிப்பிடுகிருர் கவிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/125&oldid=781539" இலிருந்து மீள்விக்கப்பட்டது