பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கவிஞன் உள்ளம் இதனுல் கல்லாத நல்லவர்களை ” விலக்கியிருக்கும் கயம்பாராட்டத்தக்கது. அங்ங்னமே கற்றவர்கள் யாவரும் ஒழுக்க முடையோர், கல்லோர் என்று சொல்லி விடுதல் முடியாது. படித்தவர்களில் நல்லவர்களும் இருக்கிருர் கள், தீயவர்களும் இருக்கிருர்கள். கல்வி மனிதனது தியகடத்தையைத் திருத்தலாம்,இயற்கையிலேயே தீக் குணம் உள்ளவர்கள் இன்னும் பன்மடங்கு தீயவர் களாகவும் ஆகலாம். ஒருவனது அறிவுக்கும் அவனது பண்புக்கும் யாதொரு தொடர்பும் இல்லே. மனிதர் களின் செயல்களேக் கூர்ந்து கவனிப்பிவர்கள் இத்ை நன்கு அறிவார்கள். அதனுல்தான் கம்பர் படிக்காதவர் களுள் நல்லவர்களே நீக்குவதற்குக் கல்லாப் புல்லர்' என்று சொன்னது போலவே, கற்றவர்' என்று சொல்லாது, கற்றவர்களுள்தியவர்களேவிலக்க'கல்லோர்' எனப் பொதுவாகக் குறிப்பிடுகிருர். படிக்காதவர்கள் படித்தவர்கள் என்ற இருகூட்டங்களிலும் கல்லோர்’ இருப்பதை யாவரும் அறிவார்கள். நல்லவர்களாக இருப்பதற்குப் படிப்பு' ஒருவந்தம் இல்லே. 'போயிற்று அன்றே" என்பதில் அன்று,ஏ என்பன அசை மொழிகள். அறியாதவர்கள்.அசைக் குப் பொருள் இல்லை எனக் கூறி விடுவார்கள். பாவலர்கள் இந்தி அசையில்தான் பல இசைக்குறிப் புப் பொருள்களே வைத்திருக்கின்றனர். போயிற்று அன்றே என்று. பலமுறை இசையுடன் சொல்லிப் பார்த்தால், அன்றே என்பதில் உள்ள விரைவுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/126&oldid=781541" இலிருந்து மீள்விக்கப்பட்டது