பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே பறிக்கும் காட்சி 1 3 இவ்வாறு ஓரிடத்தில் அறிந்த ஒரு சிறப்புப் பொருளே உலக மக்கள் அறிந்த அனுபவமான பொதுப் பொருள் ஒன்றுடன் பொருத்திக் கூறுவதை இலக்கண நூலார் வேற்றுப் பொருள் வைப்பு அணி' என்று கூறுவார்கள். இந்த இரண்டு ஊற்றுகளினின்றும் பரஞ்சோதி முனிவரது கருத்து எவ்வாறு பெருகியிருக்கிறது என்பதைக் கவனிப்போம். ' உழவர்கள் வயல்களில் புகுந்தார்கள்; பயிர் களுக்கு இடையே கிளேத்திருந்த கமலம், குவளே, குமுதம் முதலிய மலர்கள், அவை தமது காதலி களுடைய முகம், கண், வாய் முதலிய அவயவங்களேப் போலிருந்தன. என்ருலும், அவ்வொப்புமையைக் கரு தாது அவற்றை முற்றக் களேந்தார்கள்.” என்று கூறு கிருர் முனிவர். 3. முனிவரும் தமது பாட்டுக்கு வேற்றுப் பொருள் வைப்பணி'யைச் சூட்டி அழகு செய்திருக் கிருர் காட்டை ஆளும் அரசன் ஏவல் வழி நிற்பவர்கள் உறவினர்கள் பகைவராக வந்தால் உறவை கினேன்து அவர்களைத் தண்டிக்காது விடமாட்டார்கள் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/131&oldid=781553" இலிருந்து மீள்விக்கப்பட்டது