பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே பறிக்கும் காட்சி 1 is

  • இளமை பொருந்திய மயில்கள் வயல் வளத் தைப் பார்க்க வந்தாற்போல உழத்தியர் வந்து வயல் களில் சூழ்கிருர்கள். அவர்கள் தாமரை, அல்லி, குவளே போன்ற களைகளைக் களைந்து எறிகிருர்கள். தமது முகங்களே நீரில் கானுங்கால் முகம் தாமரை போலவும், க ண் க ள் குவளை போலவும், காணப்படுகின்றன. பறித்த களைகள் மீண்டும் எங்ங்னம் முளேத்தன என வியப்படைகிருர்கள். நீலோற்பலத்தைப் பறித்து அதை முகர்ந்து பார்க்கிருர்கள். அது அம்மலர் தமது விழிக்கு எவ்விதத்திலும் இணையில்லாதிருக்கிறதென் பதை அருகில் அழைத்துக் காட்டுவதுபோல் இருக் கிறது. குனிந்து களேபறிக்கும்போது அவர்கள் அலம ரும் விழிகளைத் தம் இனம் எனக்கருதி முகத்தின்மீது பாய்கின்ற மீன்களே எளிதாகப் பிடித்துச் சட்டியில் போட்டுக்கொள்கிருர்கள்' என்பனபோன்ற பல காட்சி களக் காட்டுகிருர். இக்காட்சிகளில் நயம் பயக்கவல்ல

ஒன்றை மட்டிலும் தருகின்றேன். 'உழத்தியர்கள் வயலில் படர்ந்துள்ள பாசி யாகிய களையைப் பறிக்கக் குனிந்தபோது சிலருடைய கொண்டை அவிழ்ந்து கூந்தல் சிக்குண்டு கையின்மேல் விழுகிறது. இது ' எங்கள் இனத்தைச் சேர்ந்த பாகியை அழிக்காதீர்கள் ' என்று சொல்வதுபோல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/133&oldid=781557" இலிருந்து மீள்விக்கப்பட்டது