பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம் f 19 கொண்டு செல்வது அறிஞர்களின் கடமை. அவர்கள்ே அவர்கள் விரும்பும் சிற்றின்ப வயத்தவர்களாக்கிப் பேரின்பத்தைக் கோடிகாட்டி அவர்கள் ஆவலுடன் வினவும் அமையம் பார்த்து அவர்களே அவகிலேயினின் றும் நீக்கித் தவநிலைக்குக் கொணர்ந்தால் அவர்களும் கல் வழிப்படுவார்கள். இவர்களை வஞ்சித்து கல்வழிப் படுத்த உதவுவதால் இந்நூலைக் களவியல் என்று பெயரிட்டார்கள். கசப்பான மருந்தை உண்ணுவதற்கு இனிப்புக் கலந்து தருவது மருத்துவர்களின் கைதேர்ந்த முறை. கொயினுமாத்திரை சர்க்கரைப் பாகு தடவிச் செய்யப் படுவது அனுபவ த் தில் கானும் ஒரு நிகழ்ச்சி செடி கொடியுலகில் ஒரு பூவிலுள்ள பூம்பொடி பிறி தொரு பூவை அடைதலால் காய்க்கும் காய்கள் கனி சிறந்திருக்கும் என்பது செடிகொடி அறிஞர்கள் வெளி யிட்ட உண்மை. இம்மாதிரி கலப்புப் பூம்பொடிச் சேர்க்கை பூச்சிகளாலும் வண்டுகளாலும் நடைபெறு கின்றது. இவ்வண்டுகளைக் கவர்வதற்குப் பூக்கள் பல வித வண்ணங்களையும், மணத்தையும் கொண்டிருத் தலுடன் அப்பூச்சிகளின் உணவாகிய தேனையும் கொண் டிருக்கின்றன. அது போலவே கடையாய மக்களைக் கவர்ச்சி செய்வதற்காகத் தான் அ றிஞர்கள் தம் பாடல் களே இன்பம் கொடுக்கவல்ல அகப்பொருளின் சுவை கலந்து பாடியிருக்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/137&oldid=781565" இலிருந்து மீள்விக்கப்பட்டது