பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கவிஞன் உள்ளம் இப்பிறவிப் பெருங்கடலில் பெரிய அலைகளும் இருக்கின்றன; சிறிய அலேகளும் இருக்கின்றன. பிறவி யில் வீழ்ந்து உயிர் அனுபவிக்கும் தீவினைப்பயன்கள் யாவும் பெரிய அலைகள்; கல்வினைப்பயன்கள் யாவும் சிறிய அலைகள். கல்வினைப்பயன்கள் இன்பம் அனுப விக்கக் காரணமாக இருந்தாலும், சிறிது காலத்திற்குள் அழியுந்தன்மை வாய்ந்தவை. தவிரவும், அவை மீண்டும் உயிர் பிறப்பதற்குக் காரணமாகவும் இருக்கின்றன. ஆகவே, கர்னல் நீர்போல் தோன்றும் அவற்றையும், அ றி ஞர் க ள் துன்பங்களாகவே கருதுகிருர்கள். இங்ஙனம் உயிர் பேரலைகளாகிய துன்பங்களாலும், சிற் றல்களைப்போல் விரைவில் அழியும் தன்மை வாய்ந்த இன்பங்களாலும் அலேக்கப்படுகின்றது. இவ்வாறு அலேக்கப்படுங்கால் அதற்குப் பற்றுக்கோடு ஒன்றும் இல்லை. சாதாரணமாக நீருக்கே நெகிழுந்தன்மை உண்டு. கடல் அலைகளின் நெகிழுந்தன்மை அளவு கடந்தது. காற்று துணைபுரியுமானல் அலைகளின் கடுமையைச் சொல்லவேண்டியதில்லை. மாணிக்கவாசகர் பெண் களைக் காற்ருக உருவகம் செய்கிருர், உயிர் பிறப்பின் வாய்ப்பட்டு முன்செய்த வினேயின் பயனே அனுபவிக் கும்போது உயிரை வந்தடையும் புதிய கருமங்களில் பெரும்பாலும் பெண்களைப் பற்றியே நிகழும். கொவ்வைப் பழத்தை யொத்த உதிடுகளினின்றும் பிறக்கும் சொற்களில் பெரும்பாலோர் மயங்கிவிடுவது கண்கூடு. ஆகவே பெண்களைக் கனியை நேர் துவர் வாயார்’ என்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/142&oldid=781575" இலிருந்து மீள்விக்கப்பட்டது