பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கவிஞன் உள்ளம் படத்தில் எருமைக்கடாவும் காட்சியளிக்கிறது. வாயுணவை காடித்திரிந்த எருமைக்கடாவுக்கு எதிர் பாராத வகையில் செவியுணவு கிட்டுகிறது. சுவை மிகுதியையுடைய செவியுணவு கிட்டவே, வாயுணவை மறந்துவிடுகிறது; உண்ணுமல், அசையாமல் கல்போல் நிற்கிறது. அவ்வளவு இன்பமாகச் செவியுணவை அனுபவிக்கிறது! 'ஐயறிவை மாத்திரம் உடைய ஒரு விலங்கு, அதுவும் ஒரு எருமைக்கடா, இசையின்பத்தில் இவ் வாறு ஒன்றி நின்றதென்ருல், ஆறறிவுடைய மக்கள் இசைக்கலையில் எவ்வளவு மேம்பாடு எய்தியிருப்பார் கள்? இசைக்கலையில் இவ்வளவு தேர்ச்சி பெற்றிருப்ப வர்கள் ஏனைய கலைகளில் எவ்வளவு உயரிய நிலையில் இருந்திருக்கவேண்டும் இவர்களுக்கெல்லாம் அரசனுக இருப்பவன் இக்கலைகளிலெல்லாம் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்?' என்பன போன்ற எண்ணங் களின் அலைகளே ஒன்றன்பின் ஒன்ருகத் தமயந்தியின் மனத்தில் எழுப்புகிருள் இந்த ஒரு சிறிய காட்சியின் வாயிலாக, அதே கவியில் பாலொடு தேன் கலந்ததுபோல் செல்க்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் " என்ற திருக்குறளின் கருத்தையும் மிக நயமாகக் குழைத்து வைத்திருக்கும் நேர்த்தி உள்ளுதோறும் பாவின் சுவையை மிகுவிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/148&oldid=781589" இலிருந்து மீள்விக்கப்பட்டது