பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கவிஞன் உள்ம்ை இங்ங்ணம் ஒரு கணம் இருப்பதற்குள் பிரம்மா திருமால்-முதலிய தேவர்கட்கெல்லாம் பற்ப்ள ஊழிகள். சென்றன. சிவபெருமான் பனிவரை மங்கையாரைப் பிரிந்து போகத்திலிருந்ததால் ம ன் மத ன் இருந்தும் ஆண் பெண் முயக்கம் இல்லாது போய்விட்டது.-உயிர் கள் எல்லாம் நாள்தோறும்குறைந்துகொண்டே வந்தன. தேவர்கள் எல்லோரும் இதனைப் பிரம்மதேவனிடம் முறையிட்டார்கள். தேவர்கள் எல்லோரும் வேண்டிெேகாண்டபடி பிரம்மதேவன் சிவபெருமான்மீது மலரம்புகளே ஏவி உமாதேவியாரைத் திருமணம் புரிந்துகொள்ள ஏற்பாடு செய்யும்படி மன்மதனே அனுப்பினர். மதனனும் மெதுவாகச்சென்று மலரம்புகளே மெதுவாக விட்டான் அவை அவரது திருமேனியில் பட்டதும், அவ்ர் மன்மதனச் சிறிதுநேரம் பார்த்தார். அவ்வளவுதான்; மன்மதன் சாம்பலானன். பிறகு சிவபெருமான் தவஞ்செய்து நின்ற உமா தேவியாரைத் திருமணம் செய்துகொண்டார். இது புராண வரலாறு. இறைவன் உயிர்களுக்குப் போகத்தை அளிப்ப தற்காகவே, மங்கை பங்கராய்ப் போக் வடிவத்தைக் கொண்டுள்ளார். உயிர்களுக்கு வீடு பேற்றை அளிப் பதற்காகவே அம்மையைப் பிரிந்து யோக வடிவத்தை யும் கொண்டிருப்பார். இது அருள் நூ ல்க ளின் கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/152&oldid=781599" இலிருந்து மீள்விக்கப்பட்டது