பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியமான பேச்சு 39 தனிமையாகச் சந்தித்து வந்தான். இச்செய்ல் அவளது ஆருயிர்த் தோழிக்கு மட்டிலும் தெரியும். அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்திப்பதற்குக் கருவியாகவும் இருந்து வந்தாள். பகலில் காதலர்கள் தனிமையில் சந்திக்கும் இடத்தை அகப்பொருள் நூலார் பகற்குறி' என்றும் இரவில் சந்திக்கும் இடத்தை இரவுக்குறி. என்றும் கூறுவார்கள். இக் களவு முறை யை இரண்டு மாதங் களுக்குமேல் கடக்க விடுவதில்லே. இந்தக் காலத்திற் குள் எப்படியாவது திருமணம் கடைபெறுவதற்கு ஏற்பாடு செய்து விடுவார்கள். இவ்வேலேயில் தோழி தான் பெரும் பங்கு எடுத்துக் காரியத்தை நிறைவு செய் வது வழக்கம். தோழி விரைவாக உலகறியத் திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந் தாள். ஒரு சமயம் அவள் வீட்டிலிருக்குங் காலத்தில் அவன் அவளைச் சந்திப்பதற்கு வந்தான். அவளது நடவடிக்கைகளில் ஐயப்பட்டு வீட்டை விட்டு வெளி யேறக்கூடாது என்று பெற்முேர் கட்டுப்படுத்திய பருவம் அது. தோழி அவனே வீட்டிற்கருகே சந்தித்தாள். ஒரு பெரிய அடிப்படையுடன் உள்ளுறைப் பொருள் ததும்பப் பேச்சைத் தொடங்குகிருள் தோழி. ' கின்னுடைய காட்டில் கல்ல செழித்த வாழைகள் மிகுந்திருக்கும். நன்முகம் பழுத்த கணியின் குலேகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/57&oldid=781704" இலிருந்து மீள்விக்கப்பட்டது